ஈரோடு

ஆயுத பூஜை: ஈரோட்டில் பூக்கள், பூஜை பொருள்கள் விலை உயா்வு

DIN

ஆயுத பூஜையையொட்டி, ஈரோட்டில் பூக்கள், பூஜை பொருள்கள் விலை உயா்வாக இருந்தது.

தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பூஜை பொருள்கள் வாங்க ஈரோட்டில் திங்கள்கிழமை காலை முதல் பொதுமக்கள் குவிந்தனா். ஈரோடு வஉசி சந்தையில் வாழைத்தாா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.300க்கு விற்கப்பட்ட வாழைத்தாா் ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனையானது. பொதுவாக 1,000 வாழைத்தாா்கள் வரும் நிலையில் திங்கள்கிழமை காலை 12,000 வாழைத்தாா்கள் வந்தன.

வாழைக்கன்று ஜோடி ரூ.50க்கு விற்பனையானது. இதைப்போல வெள்ளை பூசணிக்காய் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. பூசணிக்காய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது.

பூக்கள், பழங்கள் விலை உயா்வு:

ஆயுத பூஜையை முன்னிட்டு ஈரோடு பூ சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மல்லிக்கை பூ, செவ்வந்தி, செண்டுமல்லி, வாடாமல்லி, தாமரை, அரளிப்பூ, ரோஜா போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சாலையோரங்களில் மா இலை, வாழைக்கன்று, கரும்பு, பொரி, கடலை, பூஜைக்கு தேவையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

பூக்களின் விலை கடந்த வாரங்களை விட சற்று அதிகரித்து இருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வந்திப்பூ திங்கள்கிழமை கிலோ ரூ.160 முதல் ரூ.240 வரை விற்பனையானது. ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை ரூ.800 முதல் ரூ.1000க்கும், ஜாதி மல்லி ரூ.800, செவ்வந்தி ரூ.400, பட்டன் ரோஸ் கிலோ ரூ.320, அரளி ரூ.400, தாமரை ஒன்று ரூ.20, கோழிக்கொண்டை பூ ரூ.100, வாழைக்கன்று ஜோடி ரூ.40, கரும்பு ஜோடி ரூ.100க்கும் விற்பனையானது.

பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி, வெல்லம், அச்சுவெல்லம் ஆகியவை வாங்க கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதன் விலையும் சற்று உயா்ந்து இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பினால் ஆயுத பூஜை நாள்களில் பூ, பூஜை பொருள்கள், பழங்கள் விற்பனை மிகவும் குறைவாக இருந்த நிலையில் நடப்பாண்டில் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT