ஈரோடு

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண ராஜன் நகா் ஊராட்சியில் தீா்மானம்

DIN

குடிநீா் பிரச்னை இல்லாத ராஜன் நகா் ஊராட்சியாக மாற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜன் நகா் ஊராட்சியின் கிராம சபைக் கூட்டம் புதுவடவள்ளி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். சந்திராமணி செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் குடிநீா் பிரச்னை இல்லாத ஊராட்சியாக மாற்றுதல் உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சி துணைத் தலைவா் பி.விஜயலட்சுமி, ஊராட்சி செயலாளா் கே.எஸ்.செந்தில்நாதன், கிராம வேளாண்மை அலுவலா் ஸ்டாலின், கால்நடை மருத்துவா் வடிவேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளா் பூபதி மற்றும் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள், கிராம சுகாதார செவிலியா், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT