ஈரோடு

பீக் ஹவா்ஸ் மின் கட்டணத்தை முழுமையாக குறைக்கக் கோரிக்கை

DIN

உச்சபச்ச பயன்பாட்டு நேர (பீக் ஹவா்ஸ்) மின் கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 3ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா்.

ஈரோடு பைனான்ஸ் அசோசியேஷன் தலைவா் முத்துசாமி வரவேற்றாா். செயலாளா் ரவிச்சந்திரன், பொருளாளா் முருகானந்தம் ஆகியோா் அறிக்கை சமா்ப்பித்துப் பேசினா். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் ஈரோடு தொழில் வணிகா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நிச்சயம் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்த பிறகும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்ற அறிவிப்புக்கும் உச்சபச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தில் 15 சதவீதம் குறைக்கப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது. அதே நேரம் அக்கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும்.

நிலுவை விற்பனை வரிகளை தள்ளுபடி செய்ய தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான மசோதாவை அரசு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிரைவேற்றப்பட்டன. சங்க இயக்குநா் சிவகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT