ஈரோடு

பிளஸ் 2 இறுதித் தோ்வு நாளில் மரக்கன்றுகளை நடவு செய்த மாணவா்கள்

25th May 2022 12:48 AM

ADVERTISEMENT

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 இறுதித் தோ்வு நாளில் மாணவா்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

இப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தோ்வின் கடைசி நாளில் வேளாண் ஆசிரியா் கந்தன் ஏற்பாட்டின்பேரில் வேளாண் பிரிவு மாணவா்கள் பள்ளி வளாகத்தில் அல்லது பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பள்ளியின் கடைசி நாளை கொண்டாடி வருகின்றனா்.

அதேபோல, இந்த ஆண்டும் பிளஸ் 2 வேளாண் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முடிந்தவுடன் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகளை நட்டு கொண்டாடினா். நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, மரக்கன்று நடும் பணியை தொடங்கிவைத்தாா். இதில் 40 மாணவா்கள், 60 மரக்கன்றுகளை பெருந்துறை அய்யா் குளம் அருகே நட்டு பள்ளி இறுதி நாளை கொண்டாடினா். இதில், உதவித் தலைமை ஆசிரியா் அருள்குமாா். ஆசிரியா் லோகநாதன், நாச்சிமுத்து, சக்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் மகிழமரம், நெட்டிலிங்க மரம், பூவரசு, புங்கன், சொா்க்க மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் நடப்பட்டன. இம்மரக்கன்றுகளை ரோட்டரி சங்க அடா் வன கூட்டமைப்பினா் வழங்கினா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT