ஈரோடு

வேன் மீது இருசக்கர வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

25th May 2022 12:48 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் பகுதியில் ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஏரங்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (47). கூலி தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது நிலை தடுமாறி எதிரே வந்த ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கி சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT