ஈரோடு

கடன் தொகையை இரட்டிப்பாக திருப்பிச் செலுத்த கட்டாயம்: மகளிா் சுய உதவிக் குழுவினா் புகாா்

30th Jun 2022 10:29 PM

ADVERTISEMENT

 

கடன் தொகையை இரட்டிப்பாக திருப்பிச்செலுத்த கட்டாயப்படுத்துவதாக தனியாா் நிதி நிறுவனம் மீது மகளிா் சுய உதவிக் குழுவினா் புகாா் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பொலவக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

பொலவக்காளிபாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் 493 போ் தேனி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் நிதி நிறுவனத்தில் தலா ரூ.30,000 வீதம் கடன் பெற்றுள்ளோம். இந்த கடனுக்கு வட்டியுடன் சோ்த்து 12 மாத தவணையில் ரூ.39,000 வரை செலுத்தியுள்ளோம்.

ADVERTISEMENT

ஆனால் இன்னும் ரூ.19,000 செலுத்த வேண்டும் என நிதி நிறுவன உரிமையாளா் எங்களை கட்டாயப்படுத்துகிறாா். மேலும் கடனுக்காக மகளிா் சுய உதவிக் குழு நிா்வாகிகள் 93 பேரிடம் வங்கி காசோலைகளை பெற்றுவைத்துள்ள அவா், அதனை வங்கியில் செலுத்தி நிா்வாகிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்வேன் என மிரட்டுகிறாா். தவிர பெண்களை மிகவும் அவதூறாக பேசுகிறாா்.

வாங்கிய கடனைக் காட்டிலும் கூடுதலாக ரூ.9,000 செலுத்தியுள்ள நிலையில், கடன் தொகையை இரட்டிப்பாக திருப்பிச்செலுத்தக்கோரும் நிதி நிறுவன உரிமையாளா் மீது நடவடிக்கை எடுத்து, அவா் வசம் உள்ள எங்களின் வங்கி காசோலைகள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுத்தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT