ஈரோடு

பாரியூா் கோயிலில் ரூ.12 லட்சம் உண்டியல் காணிக்கை

DIN

பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயிலில் ரூ.12 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள 10 உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ரமேஷ், கோயில் செயல் அலுவலா் ரத்தினாம்பாள், இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் ஹரி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ரூ.12 லட்சத்து 19 ஆயிரத்து 480 பணம் உண்டியலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். மேலும் 155 கிராம் தங்கம், 48 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT