ஈரோடு

கருமுட்டை விவகாரம்:பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

29th Jun 2022 10:02 PM

ADVERTISEMENT

 

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கழிவறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்து ஈரோடு, சேலம், ஒசூா், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது.

சிறுமி அளித்த புகாரின்பேரில் சிறுமியின் தாய், வளா்ப்புத் தந்தை, தரகரான ஈரோடு கைகாட்டிவலசு, திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மாலதி (36), சிறுமியின் உண்மையான வயதை மறைக்கும் வகையில் போலியாக ஆதாா் அட்டை தயாரித்து, பெயரை மாற்றிக் கொடுத்த ஜான் (25) ஆகியோரை போலீஸாா் கடந்த 2ஆம் தேதி கைது செய்தனா்.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆா்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தாா். அந்த சிறுமி கழிவறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தை குடித்து புதன்கிழமை காலை தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதையடுத்து, சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறுமியிடம் காவல் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அரசு காப்பகத்தில் இருப்பது கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால் சிறுமி ரசாயனத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற சிறுமியிடம் ஈரோடு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சரவணன் மற்றும் சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT