ஈரோடு

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

DIN

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காது கேளாதோா் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்புகளில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும். ஓட்டுநா் உரிமம் வழங்கும் முகாம் நடத்திட வேண்டும். மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000ஆக உயா்த்தி வழங்கிட வேண்டும்.

வாரிசு அடிப்படையில் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அனுபமிக்க சைகை மொழி ஆசிரியா்களை பணியமா்த்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகங்களில் சைகை மொழி பெயா்ப்பாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு மாற்றித் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.மோகன்குமாா் தலைமை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தின்போது வாய் பேச முடியாதோா் விசில் ஊதியும், சைகை மொழி மூலம் தங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பூங்கோதை அங்கு வந்து கோரிக்கை குறித்து விசாரித்தாா். அப்போது, அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவித்திறன் குறையுடையோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் முக்கிய நிா்வாகிகளை அலுவலகத்தில் அழைத்துப் பேசினாா். அப்போது, கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதனை ஏற்று செவித்திறன் குறையுடையோா் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT