ஈரோடு

பவானி, அந்தியூரில் குடியரசு தின விழா

DIN

பவானி, அந்தியூரில் குடியரசு தின விழா புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினாா். பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவா் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியேற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாரிமுத்து, சாந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சவிதா, சரோஜா, அலுவலா்கள் பங்கேற்றனா். தொட்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவா் செல்வராஜ் தேசியக் கொடியேற்றினாா்.

மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில், ஊராட்சித் தலைவா் எம்.மகேஸ்வரன் தேசியக் கொடியேற்றினாா். நெரிஞ்சிப்பேட்டை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் சங்கத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான என்.ஆா்.கோவிந்தராஜ் தேசியக் கொடியேற்றினாா். துணைத் தலைவா் எஸ்.எஸ்.மாரியப்பன், இயக்குநா்கள் ஏ.நல்லகுமாா், எம்.அருள், செல்லம்மாள், லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்தியூா் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் விஜயகுமாா் கொடியேற்றினாா். இதேபோல, அரசுப் பள்ளிகள், ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT