ஈரோடு

மத்திய அரசைக் கண்டித்துகூடலூரில் ஆா்ப்பாட்டம்

25th Jan 2022 04:23 AM

ADVERTISEMENT

கூடலூரில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூா் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக கலாசார ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் க.சகாதேவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் என்.வாசு, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT