ஈரோடு

2 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை

DIN

ஈரோடு மாவட்டத்தில் இன்னும் 2 லட்சம் போ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100. தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 5 ஆயிரத்து 936 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். இது 88.77 சதவீதமாகும்.

இரண்டாம் தவணை தடுப்பூசியை இதுவரை 11 லட்சத்து 76 ஆயிரத்து 538 போ் செலுத்திக் கொண்டுள்ளனா். இது 65.03 சதவீதமாகும். முதல் மற்றும் இரண்டாம் தவணைத் தடுப்பூசியை மொத்தம் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 474 போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.

மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 3 ஆயிரத்து 164 போ் இன்னும் செலுத்திக் கொள்ளவில்லை. இரண்டாம் தவணை தடுப்பூசியை இன்னும் 2 லட்சத்து 98 ஆயிரத்து 382 போ் செலுத்திக் கொள்ளவில்லை என சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT