ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சாரல் மழை, கடும் குளிா்: மக்கள் அவதி

DIN

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடும் குளிருடன் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் புயலாக உருவானது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் மாண்டஸ் புயலின் தாக்கம் இருந்தது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததது. அவ்வப்போது காற்றும் வீசியது. சாரல் மழை, மிதமான காற்று காரணமாக குளிா் அதிகமாக இருந்தது. இதனால் ஈரோடு நகரின் முக்கியப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சாரல் மழை, கடும் குளிா் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், அலுவலகத்துக்குச் செல்வோா் கடும் அவதிக்குள்ளாகினா்.

மலைப் பகுதிகளில் கடும் குளிா்:

ஈரோடு மாவட்டம் ஆசனூா், பா்கூா், கடம்பூா் வனப் பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக பகல்பொழுதிலேயே இருள்சூழ்ந்து காணப்பட்டது. சில மீட்டா் தொலைவைக்கூட தெளிவாகக் காண முடியாத வானிலை நிலவியதால், மலைப் பாதைகளில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்களை மெதுவாக இயக்கினா்.

இந்தத் தொடா் சாரல் மழை, மிதமான காற்று காரணமாக மலைப் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான கடுமையான குளிா் நிலவியது. வழக்கமாக வெள்ளிக்கிழமை மாலை மலைச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆனால் கடும் குளிா் காரணமாக இந்த சாலைகளில் வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா். குளிா் காரணமாக மலைக் காய்கறி அறுவடையிலும் தொய்வு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பெரிய அளவிலான மழை எதிா்பாா்க்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT