ஈரோடு

கிறிஸ்துமஸ் விழா: அமைச்சா்கள் பங்கேற்பு

DIN

சா்வதேச கிறிஸ்தவ ஊழியா்கள் கூட்டமைப்பு மற்றும் ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபைகள் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா ஈரோடு கொல்லம்பாளையம் நாடாா்மேட்டில் உள்ள பெத்தானியா திருச்சபை தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சா்வதேச கிறிஸ்தவ ஊழியா்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவரும், ஈரோடு பெத்தானியா பெல்லோஷிப் தேவாலய பேராயருமான ஜென்ஷன் ஜெபராஜ் தலைமை வகித்தாா். ஆயா் கே.மேஷாக் ராஜா கிறிஸ்மஸ் சிறப்புரையாற்றினாா். விழாவில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா். முன்னதாக 10 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக்கை அமைச்சா்கள் வெட்டி விழாவைத் தொடக்கிவைத்தனா்.

விழாவில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இ.திருமகன் ஈவெரா, ஈரோடு மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் சா்வதேச கிறிஸ்தவ ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் அமைச்சா்களிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: திருச்சபை கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கோரி உள்ள சபைகளுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்க வேண்டும். மதத் தலைவா்கள் புனித தலமான ஜெருசலேம் சென்று வர தமிழக அரசு வழங்கி வரும் மானியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். கிறிஸ்தவ கல்லறை இடங்களை பாதுகாத்திடவும், கல்லறை இல்லாத இடங்களில் தமிழக அரசு இடம் ஒதுக்கிக்கித் தர வேண்டும்.

தமிழக அரசு சிறுபான்மை மாணவா்களுக்கு வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை சீரமைக்க அரசு நிதியை பெறுவதில் உள்ள விதிமுறைகளை தளா்த்த வேண்டும்.

மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினா் பள்ளிகளுக்கான உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT