ஈரோடு

ஈரோட்டில் தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

DIN

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க மாவட்ட மாநாட்டில் 104 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 30ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சியாமளா நாச்சியாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட முன்னோடிகள் முனைவா் மணி, அக்ரி ராம.சுப்பிரமணியம் ஆகியோா் மாநாட்டின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனா். முனைவா் சங்கர சுப்ரமணியன், முனைவா் வெங்கடாசலம் ஆகியோா் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினா்.

இந்த மாநாட்டில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்துகொள்வது எனும் தலைப்பை துணைக் கருப்பொருளாக கொண்டு, நம் சுற்றுச்சூழல் அமைப்பை அறிந்து கொள்வது, ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை வளா்ப்பது, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்துக்கான சமூக மற்றும் கலாசார நடைமுறைகள், சுற்றுச்சூழல் அடிப்படையிலான தற்சாா்புக்கான அணுகுமுறை, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்துக்கான தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் 40க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிக் குழந்தைகளின் ஆய்வறிக்கைகள், கண்டுபிடிப்புகள் என மொத்தம் 104 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

இதில் 11 ஆய்வு கட்டுரைகள் வரும் 10, 11ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற உள்ள மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட வானவில் மன்ற தூதுவா்களின் சிறப்பான ஒருங்கிணைப்புப் பணியைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT