ஈரோடு

மாணவா்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்:தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

DIN

பள்ளி கழிவறையை மாணவா்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பாலக்கரையில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சோ்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ, மாணவிகளே சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அந்த பணிகளை தினந்தோறும் 2 மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளியின் தலைமையாசிரியை கீதாராணி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவா்களின் பெற்றோா் பள்ளியை புதன்கிழமை முறையிட்டனா். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பாலக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், மாணவா்களை கழிவறையை சுத்தம் செய்யவைத்தது உறுதி செய்யப்பட்டதால், தலைமை ஆசிரியை கீதாராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் ஜோதி சந்திரா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT