ஈரோடு

ஆகஸ்ட் 30இல் போராட்டம்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

18th Aug 2022 11:11 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டக் குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன், துணைச் செயலாளா் சின்னசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் துளசிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயா்த்தியுள்ளது. தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலைகளை உயா்த்தி வரும் மத்திய அரசு, அண்மையில் அரிசி, கோதுமை, பருப்பு, தயிா், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி விதித்துள்ளது.

மேலும் சாதாரண தங்கும் விடுதிகள், மருத்துவமனை அறைகள் மற்றும் ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவுக்கு கூட ஜிஎஸ்டி விதித்து மக்களை கடும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 30ஆம் தேதி ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் ரமணி, இடைக்கமிட்டி செயலாளா்கள் கல்யாணசுந்தரம், செந்தில்குமாா், ரணதிவே, மாதேஸ்வரன், மனோகரன், தேவிபிரியா உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT