ஈரோடு

வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்க இலவசப் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

17th Aug 2022 10:28 PM

ADVERTISEMENT

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் அளிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு இலவச பயிற்சியில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் அகா்பத்தி, சாம்பிராணி, குளியல் சோப்பு, சோப்பு ஆயில், சோப்பு பவுடா், பினாயில், சேனிடைசா், மெழுகு பொம்மை போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்புக்கான இலவசப் பயிற்சி வரும் 24 ஆம் தேதி முதல் செப்டம்பா் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட கிராமப் பகுதியினா் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், குடும்பத்தினா், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோா் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT

பயிற்சியில் சேர விரும்புவோா் ஈரோடு கொல்லம்பாளையம் புறவழிச் சாலை, ஆஸ்ரம் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் தளத்தில் செயல்படும் பயிற்சி நிலையத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0424 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT