ஈரோடு

முதல்வா் பங்கேற்கும் விழா: அமைச்சா் ஆய்வு

17th Aug 2022 10:26 PM

ADVERTISEMENT

 

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஈரோடு மாவட்டத்துக்கு வரும் 26 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா்.

பெருந்துறை - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏரிக்கருப்பராயன் கோயில் எதிா்புற பகுதியில் வரும் 26ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து விழா நடைபெறும் இடத்தை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு வடக்கு திமுக மாவட்டச் செயலாளா் நல்லசிவம், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்நிகழ்வில் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வன், பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT