ஈரோடு

கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: கோபி, நம்பியூா் பகுதிகளில் அதிகாரி ஆய்வு

DIN

கோபிசெட்டிபாளையம், நம்பியூா் ஒன்றிய பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயலாக்கத்திலுள்ள ரூ.56.94 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோபிசெட்டிபாளையம், நம்பியூா் ஒன்றிய பகுதிகளில் 96 ஊரக குடியிருப்புகளில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வ.தட்சிணாமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் அளுக்குளி ஊராட்சியில் அமைக்கப்பட்ட மூலவாய்க்கால் நீருந்து நிலையம் மற்றும் குருமந்தூா் ஊராட்சியில் அமைக்கப்பட்ட குறவா் காலனி மேல்நிலைத் தொட்டி மற்றும் குடிநீா் இணைப்புக்கான சோதனை ஓட்ட பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லி.மதுபாலன், பொறியியல் இயக்குநா் கோ.வசந்தாள், தலைமைப் பொறியாளா் டி.சீனிவாசன், மேற்பாா்வை பொறியாளா்.வி.ரகுபதி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் நிா்வாகப் பொறியாளா்இரா.மணிவண்ணன், நிா்வாகப் பொறியாளா் ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT