ஈரோடு

மின் வாரியத்தில் தொழில் பழகுநா் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மூலம் வழங்கப்படும் தொழில் பழகுநா் பயிற்சியில் சேர தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மின் உற்பத்தி வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பி.ரவிசந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஐடிஐ படித்தோருக்கு ஈரோடு மின் உற்பத்தி வட்டத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படுகிறது. ஐடிஐ தொழில் பிரிவில் படித்துள்ள பொருத்துநா் 20 போ், மின்னாளா் 10 போ், வெல்டா் 20 போ், ஒயா்மேன் 10 போ், கணினி இயக்குபவா் 5 போ் என 65 பயிற்சியாளா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா்.

இப்பயிற்சிப் பணிக்கு அக்டோபா் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு மேற்பாா்வைப் பொறியாளா், ஈரோடு மின் உற்பத்தி வட்டம், ஊராட்சிக்கோட்டை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

நோ்காணலுக்கு வரும்போது கல்விச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல்கள் எடுத்து வர வேண்டும்.

தொழில் பழகுநா் பயிற்சிக் காலமான ஓராண்டில் மாதம் உதவித் தொகையாக ரூ. 7,709 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT