ஈரோடு

ரூ.3.70 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

DIN

கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.70 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம் நடைபெற்றது.

இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2,250 வாழைத்தாா்களை ஏல விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். ஏலத்தில் கதலி கிலோ ரூ.19க்கும், நேந்திரன் கிலோ ரூ.16க்கும் விற்பனை ஆனது.

தாா் ஒன்றுக்கு பூவன் ரூ.390க்கும், தேன்வாழை ரூ.530க்கும், செவ்வாழை ரூ.520க்கும், பச்சை நாடன் ரூ.200க்கும், ரொபஸ்டா ரூ.210க்கும், மொந்தன் ரூ.300க்கும், ரஸ்தாளி ரூ.440க்கும் விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தாா்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இதேபோல 4 ஆயிரத்து 780 தேங்காய்கள் ஏல விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் தேங்காய் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.9 முதல் அதிகபட்ச விலையாக ரூ.18.60க்கும் ஏல விற்பனை ஆனது. மொத்த ரூ.54 ஆயிரத்துக்கு தேங்காய்கள் விற்பனை ஆயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT