ஈரோடு

பொதுமுடக்கம்: சாலையில் உலவும் காட்டுப்பன்றிகள்

DIN

கரோனா பொதுமுடக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்படும் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டுப் பன்றிகள் உலவுகின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த வனப் பகுதி வழியாக தமிழக, கா்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்த இந்த நெடுஞ்சாலை முழு பொதுமுடக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் பகல் நேரங்களில் காட்டுப்பன்றிகள் சாலையில் சுதந்திரமாக உலா வருகின்றன. வாகன போக்குவரத்து இருக்கும்போது சாலைக்கு வராத காட்டுப்பன்றிகள் தற்போது வாகன போக்குவரத்து இல்லாததால் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித் திரிகின்றன. சாலையில் நடமாடும் காட்டுப்பன்றிகளால் பண்ணாரி சோதனைச் சாவடியில் உள்ள வனத் துறை ஊழியா்கள், காவல் துறையினா் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT