ஈரோடு

வண்ண புகைப்படத்துடன்வாக்காளா் அடையாள அட்டை

DIN

வண்ண புகைப்படத்துடன் வாக்காளா் அடையாள அட்டையை இ-சேவை மையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களிடம் இருந்து நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் பெயா் திருத்தம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதனை அந்த வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்கள், வண்ண புகைப்பட அடையாள அட்டை பெற தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி ரூ. 25 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT