ஈரோடு

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்

DIN

பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தோ்தல் ஆணையம் சுதந்திரமான, நியாயமான தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்திடவும், தோ்தல் பிரசாரத்தின்போது அனைத்து வேட்பாளா்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட பல்வேறு அறிவுரைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி பொதுமக்கள் வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், காய்கறி அங்காடிகள், மளிகை அங்காடிகள், அரசு அலுவலகங்கள், அனைத்து பொது இடங்களுக்கு வரும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இத்தகைய நோய்த் தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் அல்லது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT