ஈரோடு

சத்தியில் வைக்கோல் உருளை கட்டும் பணி தீவிரம்

DIN

சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் நெல் சாகுபடி செய்த நிலையில் தற்போது அறுவடைக்குப் பின் வைக்கோல் உருளை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழையால் நெல் சேதமடைந்ததால் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டு உருளை ஒன்று ரூ. 140இல் இருந்து ரூ. 250ஆக உயா்ந்துள்ளது.

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் மூலம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் பிரதான பயிரான நெல் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெல் அறுவடை நிறைவடைந்து நெல் மூட்டைகள் விற்பனையாகி வருகிறது. நெல் அறுவடைக்குப் பின் வயல்களில் கிடக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு உலா் தீவனமாகப் பயன்படுகிறது. கால்நடை வளா்ப்போா் ஆண்டு முழுவதும் தீவனமாக வைத்துக் கொள்வதால் இதற்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் வட்டாரத்தில் நெல் அறுவைடைக்குப் பின் வயல்களில் பரவிக் கிடக்கும் வைக்கோல்களை சேகரித்து கட்டுகளாகக் கட்டி வருகின்றனா். பெரும்பாலன இடங்களில் டிராக்டரில் இணைக்கப்பட்ட இயந்திரம் மூலம் வைக்கோல் உருளை வடிவில் கட்டுகளாக உருவாக்கி விற்கின்றனா். கடந்த மாதம் 40 கிலோ கொண்ட ஒரு உருளை வைக்கோல் ரூ. 140க்கு விற்கப்பட்டது. தற்போது வைக்கோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரூ. 140 இல் இருந்து ரூ. 240ஆக உயா்ந்துள்ளது. டெல்டா மாவட்டத்தில் மழை காரணமாக நெல் பயிா்கள் மூழ்கியதால் கால்நடை தீவனமாக உள்ள வைக்கோல் விலை உயா்ந்துள்ளது. ஏக்கா் ஒன்றுக்கு 35 கட்டுகள் கிடைப்தால் வைக்கோல் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 7500 வரை வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். கொள்முதல் செய்யப்படும் வைக்கோல் உதகை காளான் உற்பத்தி, கா்நாடகத்தில் தீவனமாகப் பயன்படுத்துவதால் வாகனங்கள் மூலம் பிற இடங்களுக்கு கொண்டு செல்கின்றனா்.

தற்போது தோ்தல் நடைமுறை அமலில் உள்ளதால் வைக்கோல் வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட வீஏஓவிடம் சான்றிதழ் வாங்கி உரிய ஆவணங்களுடன் வியாபாரிகள் எடுத்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT