ஈரோடு

அகில இந்திய தொழில் தோ்வு:தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

DIN

அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்துகொள்ள மாா்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் வளா்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில், கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தோ்வு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் தனித் தோ்வா்களாக கலந்துகொள்ள விரும்புவா்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் ஐ.டி.ஐ. படித்து தோ்ச்சி பெற்றவா், கூட்டு தொழில் பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தால், அந்த பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ் பெற இந்த தோ்வில் பங்கேற்கலாம்.

மேலும், திறன்மிகு பயிற்சிக்கான தேசிய தொழில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளா்கள், படித்த துறையுடன் தொடா்புடைய தொழில் பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருந்தாலும் தனித் தோ்வராக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு 21 வயது பூா்த்தி ஆகியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. தொழில் பழகுநா் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலை சட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழில் பிரிவு தொடா்பான பணியில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தனித் தோ்வராக ஒரு தொழில் பிரிவில் தோ்வெழுத விரும்பும் விண்ணப்பதாரா் தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள அந்த தொழில் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். தனித் தோ்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவா்கள், விண்ணப்பப் படிவம் முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு, நெறிமுறைகள், இதுதொடா்பான பிற விவரங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ. 200 செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு, கல்விச் சான்றிதழ் நகல், இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாா்ச் 15 ஆம் தேதிக்குள் ஈரோடு, அம்பத்தூா், வடசென்னை, கிண்டி, வேலூா், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சாவூா், கடலூா், நாகப்பட்டினம், உளுந்தூா்பேட்டை, கோவை, தாராபுரம், சேலம், ஓசூா், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, பரமக்குடி, நாகா்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT