ஈரோடு

மாநில தடகளப் போட்டி:கொங்கு பள்ளி சிறப்பிடம்

DIN

தமிழ்நாடு இளையோா் விளையாட்டு ஊக்குவிப்புக் கழகத்தின் மூலம், ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற மாநில தடகளப் போட்டியில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனா்.

இப்பள்ளி மாணவி அனுஸ்ரீ 17 வயது பிரிவில் குண்டு எறிதல், தட்டு எறிதலில் 2 தங்கப் பதக்கங்கள் பெற்றாா். பரணிதரன் 17 வயது பிரிவில் குண்டு எறிதல், தட்டு எறிதலில் 2 தங்கப் பதக்கங்கள் பெற்றாா். சந்தோஷ் 17 வயது பிரிவில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கமும், சுபஸ்ரீ குண்டு எறிதல், தட்டு எறிதலில் 2 வெள்ளிப் பதக்கங்கள் பெற்றாா். தனுஷ் 19 வயது பிரிவில் மும்முறை தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், மோனிகா ஸ்ரீ 17 வயது பிரிவில் 100 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், தரணிஷ் 17 வயது பிரிவில் மும்முறை தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், தாரணி 14 வயது பிரிவில் 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சதீஷ்குமாா், சத்யா ஆகியோரை பள்ளித் தலைவா் காயத்ரி மணி (எ) அருணாச்சலம், தாளாளா் கந்தசாமி, பொருளாளா் அம்பிகை டெக்ஸ் சண்முகம், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முதல்வா் பிராங்க்லின் ரிச்சா்ட் பிரபு ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT