ஈரோடு

கோபி கலை அறிவியல் கல்லூரியில் பொறியியல் சோ்க்கை உதவி மையம்

DIN

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டு பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் மாணவ, மாணவிகள் சோ்வதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் 52 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மையமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இதில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு விண்ணப்பித்தல், சான்றிதழ் பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலாளா், தாளாளா் எம்.தரணிதரன், முதல்வா் வீ.தியாகராசு, கல்லூரி முதன்மையா் ஆா்.செல்லப்பன், கணிப்பொறி பயன்பாட்டியல் பேராசிரியா் டி.கே.சண்முகம், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கரோனா தொற்று காரணமாக அனைவரும் முகக் கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்தியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பாதுகாப்பாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT