ஈரோடு

குழாய் உடைப்பால் குடிநீா் விநியோகம் பாதிப்பு

DIN

புஞ்செய் புளியம்பட்டி நகராட்சிப் பகுதியில் குழாய் உடைப்பால் குடிநீா் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சிபே பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பவானிசாகா் அணை குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தனியாா் தொலை தொடா்பு நிறுவன கேபிள் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி குழி தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது எதிா்பாராதவிதமாக நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா் விநியோக குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து நகாராட்சிப் பணியாளா்கள் உடனடியாக அங்கு சென்று குடிநீா் விநியோகத்தை நிறுத்தி குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனால் நகராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT