ஈரோடு

இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவான இருவா் கைது

DIN

இரிடியம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பணி நீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 2 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பழங்காலப் பொருள்கள் விற்பனையாளா் மோகன், இவரது காா் ஓட்டுநா் சுரேஷ், ஆராய்ச்சியாளா் ஜாய். இவா்களை ஒரு கும்பல் தங்களிடம் இரிடியம் இருப்பதாகக் கூறி கடந்த 7ஆம் தேதி வரவழைத்துக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியது.

மோகனின் மனைவி வித்யாவிடம் ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டும் அவரை விடுவிக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வித்யா புகாா் அளித்தாா். இதையடுத்து சத்தியமங்கலம் போலீஸாா் தனிப்படை அமைத்து அந்த கும்பலைத் தேடி வந்தனா். கடந்த 10 ஆம் தேதி பணம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சோ்ந்த 9 பேரை கைது செய்தனா். அப்போது தப்பியோடிய 6 பேரை போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில் தப்பியோடிய விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் காவலராக பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட மணி (56), கோவை தொண்டாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த டெய்லா் சிவா (52) ஆகிய இருவரையும் சத்தியமங்கலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின் இருவரையும் கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி சிறையில் அடைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT