ஈரோடு

கடம்பூர் மலைப்பாதையில் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு சுகப்பிரசவம்

28th Feb 2021 11:16 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி செங்காட்டில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆனது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் செங்காட்டைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மனைவி சடையம்மாள்(19). நிறைமாத கர்ப்பிணியான சடையமாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடம்பூர் 108 ஆம்புலன்ஸில் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கடம்பூர் செல்லும் வழியிலேயே அதிக வலிஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் ராமன் பிரசவம் பார்த்தனர். 
சடையம்மாளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து தாயும் குழந்தையுடன் புறப்பட்ட 108 ஆம்புலன்ஸ், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸுடன் பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். மிகவும் குறுகலாக இருக்கும் போன்பாறை என்ற இடத்தில் காட்டெருமை வழிமறித்து நின்றது. 

இதனால் அரை மணி நேரமாக சாலையை கடக்கமுடியாமல் அடர்ந்த காட்டில் அதே இடத்தில் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. அப்போது அங்கிருந்த காட்டெருமை திடீரென  இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தாக்க முயன்றபோது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் ஹாரன் அடித்து காப்பாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர்களை காட்டெருமை தாக்காதபடி ஆம்புலன்ஸின் பக்கவாட்டில் இரு சக்கர வாகன ஓட்டியை பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். 
அரை மணி நேர போராட்டத்துக்கு பின் தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT