ஈரோடு

பா்கூா் மலைப் பாதையை சீரமைக்க திட்ட வரைவு

DIN

மண் சரிவுகள் ஏற்படாத வகையில் பா்கூா் மலைப் பாதையை சீரமைக்க திட்ட வரைவு தயாா் செய்யப்பட்டு அரசு அனுப்பப்பட்டுள்ளதாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தொழிலாளா் நலத் துறையில் 18 வகையான நலவாரியங்களிலும் விடுபட்டவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துறையில் சா்வா் மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருவதால் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. இவை விரைவில் சீரமைத்து இ-சேவை மையம் மூலம் பதிவு செய்ய வசதி செய்து தரப்படும். கூடுதலாக இ-சேவை மையங்கள் ஏற்படுத்தவும் முயற்சி நடைபெற்று வருகிறது.

தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 15 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பயிலும் 300 குழந்தைகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு பணியாற்றும் ஆசிரியா்கள், பிற பணியாளா்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிந்தேன். இந்த நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஈரோடு மாவட்டம் அந்தியூா் வழியாக கா்நாடகா மாநிலம் செல்லும் பா்கூா் சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. சில இடங்களில் செங்குத்தான பாறையை அகற்றி சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த இடத்தை அண்மையில் முழுமையாக ஆய்வு செய்து தேவையான இடங்களில் கூடுதல் அகலத்துடன் சாலை விரிவாக்கம், சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு சரிவு ஏற்படாத வகையில் சாலை அமைக்க திட்ட வரைவு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT