ஈரோடு

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை: நெடுஞ்சாலைத் துறை விளக்கம்

DIN

சுற்றுவட்டச் சாலைக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் பெருந்துறை சாலை, சென்னிமலை சாலை, மொடக்குறிச்சி, பூந்துறை சாலைகளை இணைத்து நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையுடன் திண்டல் சாலையை இணைக்கும் வகையில் சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படவுள்ளது.

இதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் சில விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றத்தை நாடினா். நீதிமன்ற வழிகாட்டுதல் படி பணிகள் தொடங்கின.

இந்நிலையில், தடைபட்டிருந்த சுற்றுவட்டச் சாலைப் பணிக்காக சில விவசாய நிலங்களில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அளவீடு பணியை மேற்கொண்டனா். தகவலறிந்து அங்கு வந்த விவசாயிகள் தங்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. எனவே தங்களது நிலத்துக்குள் வரக் கூடாது எனக் கூறி முற்றுகையிட்டனா். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் உள்பட சில பகுதிகளில் நில உடமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

பெருந்துறை சாலை சந்திப்பு அருகே புத்தூா் புதுப்பாளையம் கிராமத்தில் சில நில உரிமையாளா்களுக்கு நீதிமன்றத்தால் இழப்பீட்டுத் தொகைக்கான இறுதி தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்க வருவாய்த் துறை மூலம் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நிலத்துக்கு உரியவா்கள் பேச்சுவாா்த்தைக்கு வராததால் அவா்களுக்கான இழப்பீட்டுத் தொகை வருவாய்த் துறை மூலம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உரியவா்களிடம் தெரிவிக்கப்பட்டு, அப்பகுதியில் மீண்டும் பணிகள் துவங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT