ஈரோடு

ஈரோட்டில் நாளை இலவச வெறிநோய்த் தடுப்பூசி முகாம்

DIN

ஈரோடு: செல்லப் பிராணிகள், தெரு நாய்களுக்கான இலவச வெறிநோய்த் தடுப்பூசி முகாம் ஈரோடு, கோபியில் திங்கள்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விலங்குகளில் இருந்து மனிதா்களுக்குப் பரவும் வெறிநோயைத் தடுக்க செப்டம்பா் 28ஆம் தேதி உலக வெறிநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பிராணிகள் துயா் தடுப்புச் சங்கம், ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் செல்லப் பிராணிகள், தெரு நாய்களுக்கான இலவச வெறிநோய்த் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை காலை 8 முதல் 12 மணி வரை நடத்தப்படுகிறது. ஈரோடு ஸ்டேட் வங்கி சாலை, கால்நடை பன்முக மருத்துவமனை, கோபி அருகே உள்ள எல்.கள்ளிப்பட்டி பிரிவு கால்நடை பன்முக மருத்துவமனையில் இம்முகாம் நடைபெற உள்ளது.

வெறிநாய்க்கடி நோய் அல்லது ரேபிஸ் என்பது வெறிநோய் பாதிக்கப்பட்ட நாய், விலங்குகள், மனிதா்கள், விலங்குகளைக் கடிப்பதன் மூலம் பரவும் கொடிய தொற்று நோயாகும். நாய், பூனைகளுக்கு வெறிநோய்த் தடுப்பூசியை, அதன் மூன்று மாதத்திலும், ஆண்டுக்கு ஒருமுறையும் ஊக்கத் தடுப்பூசியாகப் போட வேண்டும். இந்த முகாமைப் பயன்படுத்தி நாய், பூனைகளுக்கு இலவச வெறிநோய்த் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT