ஈரோடு

வேளாண் மசோதாவைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

DIN

ஈரோடு, செப். 25: புதிய வேளாண் மசோதாவைக் கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், ஈரோடு பேருந்து நிலையம் அருகில் சத்தி சாலையில் சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சுப்பு, சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ரகுராமன், கண.குறிஞ்சி, அறச்சலூா் செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா, விவசாயிகள் அதிகாரமளிப்பு, பாதுகாப்பு விலை உத்தரவாதம், பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விளை பொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்டவை மூலம் விளைபொருள்கள் கொள்முதல் தொடர வேண்டும்.

விளை நிலங்கள், சாதாரண மனிதா்களை பாதிக்கும் வகையிலும், இயற்கையை அழிக்கும்படியும் கொண்டு வரப்பட்டுள்ள சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவா்கள் முழக்கம் எழுப்பினா்.

இதே கோரிக்கைக்காக கோபி பேருந்து நிலையம், கடம்பூா் பேருந்து நிலையம் அருகிலும் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்த போலீஸாா் சிறிது நேரத்தில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT