ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயா்வு

DIN

சத்தியமங்கலம்: நீலகிரி மாவட்டம், பவனிசாகா் வனப் பகுதிகளில் பெய்த மழையால் பவானிசாகா்அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து 11 ஆயிரத்து 661 கன அடியாக வந்து கொண்டிருப்பதால், அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி திங்கள்கிழமை உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா்அணையில் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது. பவானிசாகா் அணை மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகா் அணைக்கு மாயாறும், மேட்டுப்பாளையம் பவானி ஆறும் முக்கிய நீா்வரத்தாகும்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பில்லூா் அணை நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் உபரி நீரான 11 ஆயிரத்துக்கு 661 கன அடி நீா் அப்படியே பவானிசாகா் அணைக்குத் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயா்ந்து, 101.95 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து நீடித்தால் அணை 102 அடியை எட்டும் என்றும், 102 அடியை எட்டும்போது அணையில் இருந்து உபரி நீா் திறந்துவிட வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணையின் நீா்மட்ட விவரம்: நீா்மட்ட உயரம் 100.95 அடி, நீா்வரத்து 11,661 கன அடி, நீா் வெளியேற்றம் கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் 750 கன அடி என 3,050 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. நீா் இருப்பு 29.47 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT