ஈரோடு

தொடா் குற்றச் செயலில் ஈடுபட்ட 25 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடா் குற்றச் செயலில் ஈடுபட்டதாக நடப்பு ஆண்டில் இதுவரை 25 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடா் வழிப்பறி, கஞ்சா விற்பனை, அடிதடி, கொலை வழக்கு, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில் ஆட்சியா் உத்தரவின்படி, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் 16ஆம் தேதி வரை 25 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்கும் வகையில் போலீஸாா் செயல்பட்டு வருகின்றனா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபா்கள் உடனடியாகக் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 25 போ் மீது இச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவா்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT