ஈரோடு

தேசிய யோகா போட்டி: ஈரோட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு இளம் சாதனையாளர் விருது

DIN

தேசிய யோகா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ஈரோட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ஈரோடு சூளை ஈ.பி.பி.நகரை சேர்ந்த வெங்கடேஷ் மகன் இனியன்(4). எல்.கே.ஜி. படித்து வருகிறார். இனியன் இரண்டரை வயதில் இருந்தே யோகாவில் ஆர்வம் இருந்ததால், அவரது பெற்றோர் வீட்டுக்கு அருகில் இருக்கும் பவித்ரா யோகா பயிற்சி மையத்தில் சேர்த்து, யோகா பயிற்சி அளித்தனர். பயிற்சி மையத்தின் மூலம் கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் 3வயதுடையோர் பிரிவில் இனியன் பங்கேற்று, பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றார். 

தேசிய போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இனியனுக்கு ஈரோடு ஜேசிஐ வார விழா சார்பில் நேற்று இளம் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஜேசிஐ மண்டல தலைவர் சென்.மதிவாணன் தலைமையில், ஜேசிஐ ஈரோடு எக்ஸல் தலைவர் மணிகண்டன், இனியனுக்கு விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஜேசிஐ செயலாளர் பார்த்திபன், முன்னாள் தலைவர் ராஜசேகர், வார விழா தலைவர்  பிரபாகரன், செயலாளர் கவின்குமார், யோகா பயிற்சியாளர் பவித்ரா, இனியனின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT