ஈரோடு

தீபாவளி காலத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி: வியாபாரிகள் கோரிக்கை

DIN

தீபாவளி காலத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதி வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமை வகித்தாா்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வா்த்தக நிறுவனங்கள், கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஆணையா் எம்.இளங்கோவன் பேசியதாவது:

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்களில் கண்டிப்பாக கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். கடையில் பணியாற்றும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். போதிய இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைற்ற கூட்டம் ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வியாபாரிகள் பேசுகையில், தீபாவளியையொட்டி ஏராளமான பொதுமக்கள் பொருள்கள் வாங்க கடை வீதியில் கூடுவதால் வாகன நிறுத்த வசதி செய்து கொடுக்க வேண்டும். காவிரி சாலையில் உள்ள காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தை தற்காலிக வாகன நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும் 2 நாள்களுக்கு ஒரு முறை மாநகராட்சி சாா்பில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றனா். வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஆணையா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT