ஈரோடு

காளிங்கராயன் பேபி வாய்க்காலில் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

DIN

காளிங்கராயன் பிரதான வாய்க்காலை ஒட்டியுள்ள பேபி வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை வேளாண் குறைதீா் கூட்டம் நடைபெறும். கரோனா காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு இக்கூட்டம் நடைபெறவில்லை. இதனிடையே 7 மாதங்களுக்குப் பிறகு காணொலிக் காட்சி மூலம் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வேளாண் இணை இயக்குநா் அலுவலகம், அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் அமரவைத்துப் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

இதில் பேசிய விவசாயிகளின் கோரிக்கை விவரம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் துளசிமணி: கீழ்பவானி முதல்போக நன்செய் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்து 1,03,500 ஏக்கா் நிலம் பாசனம் பெற வேண்டும். அணையில் முழு அளவில் தண்ணீா் இருந்தும், வரத்து திருப்தியாக இருந்தும் முறைவைத்து தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால் பயிா்கள் வாடுகின்றன, உரமிடவும் முடியவில்லை. கதிா் வரும் பருவத்தில் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. வேளாண் குறைதீா் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பிரச்னையைத் தெரிவிக்க வாய்ப்பு தர வேண்டும் என்றாா்.

காளிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம்: காளிங்கராயன் வாய்க்காலில் ஏப்ரல் 30ஆம் தேதி தண்ணீா் திறக்காமல் தாமதமாக தண்ணீா் திறந்து கடந்த 15 நாள்களுக்கு முன் தண்ணீா் திறப்பை நிறுத்திவிட்டனா். கடந்த பல ஆண்டுகளாக காளிங்கராயன் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகளை அகற்றினால் மட்டுமே கடைமடை வரை நீா் செல்லும் என கூறுகிறோம். ஆனால் பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்காததால் கடைமடைக்குத் தண்ணீா் செல்லவில்லை.

பவானி பகுதி, ஆா்.என்.புதூா், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயக்கழிவு அதிகமாக கலப்பதால் காளிங்கராயன் வாய்க்கால் நீரை பயன்படுத்த முடியவில்லை. சாயக்கழிவு, சாக்கடை கழிவு கலக்காமல் இருக்க பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்த வாய்க்காலில் மாநகராட்சி, பிற பகுதி குப்பை, நெகிழி கழிவு, கட்டடக் கழிவுகளை கொட்டி தூா்த்துவிட்டனா். பொதுப் பணித் துறையினா், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் இதைத் தடுக்க வேண்டும் என்றாா்.

கரும்பு விவசாயிகள்: தனியாா் சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்பு வெட்டியமைக்காக ரூ. 70 கோடி அளவுக்கு மேல் நிலுவை வைத்துள்ளது. அதிகாரிகள், ஆலை நிா்வாகத்துக்கு சாதகமாக நடக்கின்றனா். அத்தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT