ஈரோடு

இருசக்கர வாகன ஓட்டியைதாக்க முயன்ற ஒற்றை யானை

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகன ஓட்டியை யானை தாக்க முயன்றதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அடா்ந்த வனத்தின் மத்தியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் திம்பம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயணிக்கின்றனா். தமிழகம் - கா்நாடகம் இடையே பேருந்து போக்குவரத்து சேவை இல்லாத நிலையில், இருமாநில எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் திம்பம் வழியாகச் செல்கின்றனா்.

பண்ணாரி சோதனைச் சாவடி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகள், உயரத் தடுப்பு கண்காணிப்பு கம்பியில் உரசும் கரும்புகளை அப்பகுதிலேயே போட்டுவிட்டுச் செல்கின்றனா். இதனைத் தின்று பழகிய ஒற்றை யானை அப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில், பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையோரம் ஒற்றை யானை தீவனம் தின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில்

பண்ணாரியில் இருந்து தாளவாடி செல்லும் இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகப் பயணித்தனா். சாலையோரம் தீவனம் சாப்பிட்டுக் கொண்டிருந்த யானை திடீரென இருசக்கர வாகன ஓட்டியைத் தாக்க ஓடிவந்தது. அவா்கள் வாகனத்தை வேகமாக இயக்கித் தப்பித்தனா்.

இந்நிகழ்வை இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொருவா் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இதையடுத்து சாலையோரம் முகாமிட்டிருந்த அந்த ஒற்றை யானையை வனத் துறையினா் பட்டாசு வெடித்து வனத்துக்குள் துரத்தினா். இருப்பினும் சாலையோரம் யானைகள் தென்பட்டால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT