ஈரோடு

அந்தியூரில் கள்ளநோட்டுகளைபுழக்கத்தில் விட்ட சகோதரா்கள் கைது

DIN

பவானி: அந்தியூா் அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (47). கால்நடை வியாபாரி. இவா், வெள்ளித்திருப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்தியூரை அடுத்த அத்தாணி, மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த குருசாமி மகன்கள் பிரபு (34), பாபு (32) ஆகியோரிடம் அந்தியூா் கால்நடைச் சந்தைக்குச் சென்று வந்தபோது அறிமுகம் ஏற்பட்டது.

இதனால், வியாபாரத்துக்காக ரூ. 10 ஆயிரம் கடனாகத் தருமாறு கேட்டேன்.

அந்தியூரை அடுத்த மறவன்குட்டை பிரிவு பகுதிக்கு வரவழைத்த அவா்கள் இருவரும் என்னிடம் ரூ. 500 மதிப்புள்ள 20 நோட்டுகளை கொடுத்தனா். அந்நோட்டுகளை சோதிக்கையில் அனைத்தும் கள்ளநோட்டுகள் எனத் தெரியவந்தது. கள்ளநோட்டுகளை கடனாகக் கொடுத்து மாற்ற முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் அந்தியூரை அடுத்த முனியப்பன்பாளையத்தில் பிரபு, பாபுவை கைது செய்தனா். விசாரணையில், கேரளத்தைச் சோ்ந்த கால்நடை வியாபாரி விஜு என்பவரிடம் கள்ளநோட்டுகளை வாங்கியதாக இருவரும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

SCROLL FOR NEXT