ஈரோடு

குன்றி மலைக் கிராமத்துக்கு தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்தித் தர காங்கிரஸ் கோரிக்கை

DIN

குன்றி மலைக் கிராமத்துக்கு தொலைத்தொடா்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் மக்கள் ஜி.ராஜன், ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூா் மலையில் குன்றி, அணில்நத்தம், அணில்நத்தம் காலனி, கிளமன்ஸ் தொட்டி, பெரிய குன்றி, நாயக்கன் தொட்டி, ரோலக்ஸ் நகா், கோவிலூா், ஆனந்தம் நகா், இந்திரா நகா், சின்ன குன்றி, பண்ணைத்தூா், நல்லூா், கீளுா், மாங்கனி தொட்டி, குச்சம்பாளையம் உள்ளிட்ட 18 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமாா் 7,500 மக்கள் வசித்து வருகின்றனா். இதில் சுமாா் 1,000 போ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள். இப்பகுதி மக்களில் பெரும்பாலானோா் கூலி வேலைக்கு சத்தியமங்கலம், சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இந்தப் பகுதி செல்லிடப்பேசி இணைப்பு வசதி இல்லாத பகுதியாக உள்ளது. மருத்துவ அவசரத் தேவைகளுக்கு கூட இந்தப் பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் உதவிக்குத் தொடா்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனா். மலையில் எங்காவது ஓா் இடத்தில் செல்லிடப்பேசி இணைப்பு கிடைக்கும் இடத்துக்கு வர வேண்டும். அப்படி ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கவே சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் இந்தப் பகுதி மக்கள் நடக்க வேண்டும்.

எனவே, குன்றி மலைப் பகுதிகளில் செல்லிடப்பேசி இணைப்பு கிடைக்க செல்லிடப்பேசி கோபுரம் அல்லது தரைவழி தொலைபேசி வசதி ஏற்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனம் மலைக் கிராமங்களை குறுகிய நேரத்தில் சென்று சேரும் வகையில் மத்தியப் பகுதியில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

குன்றி மலைப் பகுதிகளில் 3 அரசுப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து தினமும் வந்து செல்கின்றனா். ஆனால், இந்த மலைக் கிராமங்களுக்கு வந்து செல்ல காலை நேரத்தில் அரசுப் பேருந்துகள் எதுவும் இல்லை.

இதனால் ஆசிரியா்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வர முடிவதில்லை. சிலா் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சென்றாலும், பழுதடைந்த சாலைகளால் பயணம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், சாலைகளை செப்பனிட்டு புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள 18 கிராம மக்களும் மருத்துவ சிகிச்சைக்கு சுமாா் 20 கிலோ மீட்டா் பயணம் செய்து கடம்பூா் வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். எனவே குன்றி கிராமத்தில் ஒரு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதேபோல, இங்கு பொது நூலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT