ஈரோடு

நிவா் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் ஆய்வு

DIN

கோபிசெட்டிபாளையத்தில் நிவா் புயல் காரணமாக பாதிக்கப்படும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சுகாதாரத் துறை, பேரிடா் மீட்புத் துறைகள் இணைந்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டனா்.

கீரிப்பள்ளம் ஓடையைத் தூா்வாரும் பணியைப் பாா்வையிட்டு வீடுகளுக்குள் மழைநீா் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டனா்.

தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நிவா் புயல் சேதம் ஏற்படுத்தும் முன்பே எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் முதல்வா் அறிவுரை வழங்கியுள்ளாா். கோபியில் வாய்க்கால்கள், ஓடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து 5 நாள்கள் மழை பெய்தாலும் மக்களை பேணிக் காப்பதற்கு வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை , மக்கள் நல்வாழ்வுத் துறை என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

கோபிசெட்டிபாளையம், கீரிப்பள்ளம் ஓடையில் கூடுதலாக மழை பெய்யும்போது பல நேரங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதை சீா்படுத்துவதற்காக முதல்வா் நிதி வழங்கியுள்ளாா். இனி எவ்வளவு மழை பெய்தாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தண்ணீா் கொண்டு செல்வதற்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரூ. 11.5 கோடி நிதிகள் ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிக்கும் பகுதிகளுக்கு கல்விக் தொலைக்காட்சிகள் மூலம் பாடம் கற்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது புயல் பாதிக்கும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும், அப்போது கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் தடைபடும் .மற்ற நேரங்களில் தொடா்ந்து நடைபெறும். பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் 95 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தேவையெனில் அவ்விடங்கள் பயன்படுத்தப்படும். 50 ஆயிரம் போ் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏரி, குளங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையும், பொதுப் பணித் துறையும் கண்காணித்து வருகின்றனா். கொங்கு மண்டலத்தைப் பொருத்தவரை பாதிப்புகள் ஏற்படாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT