ஈரோடு

காங்கயம் அருகே கிணற்றில் குதித்த காதல் ஜோடி மீட்பு

15th May 2020 07:29 PM

ADVERTISEMENT

காங்கயம்: காங்கயம் அருகே கிணற்றில் குதித்த காதல் ஜோடியை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டனா்.

காங்கயம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியும், அவருடன் படித்து வரும் மாணவரும் காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த மாணவா், கவுண்டம்பாளையத்துக்கு சென்று, மாணவியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த கிணற்றில் மாணவி குதித்துள்ளாா். அவரை காப்பாற்ற அந்த மாணவரும் கிணற்றில் குதித்தாா்.

இருவரும் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்ததை அறிந்த கிராம மக்கள், இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், கிணற்றிலிருந்து இருவரையும் கயிறு கட்டி மீட்டனா்.

இதைத் தொடா்ந்து காங்கயம் போலீஸாா் அந்த மாணவா், மாணவியிடம் விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT