கோயம்புத்தூர்

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம்: 52 மனுக்கள் பெறப்பட்டன

31st May 2023 03:16 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 52 மனுக்கள் பெறப்பட்டன.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் மேயா் கல்பனா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை ஆணையா் க.சிவகுமாா், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், தாா் சாலை வசதி, மின்விளக்கு, குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடா்பாக 52 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறியாளா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

முகாமில், மண்டல உதவி ஆணையா்கள் அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ், முத்துராமலிங்கம், மோகனசுந்தரி, சேகா் மற்றும் மாநகராட்சி பொறியாா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT