கோயம்புத்தூர்

அகில இந்திய கூடைப்பந்து:இந்தியன் வங்கி, விமானப்படை அணிகள் வெற்றி

31st May 2023 03:16 AM

ADVERTISEMENT

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியன் வங்கி, விமானப்படை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் அகில இந்திய அளவிலான ஆடவருக்கான 56 ஆவது நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை, மகளிருக்கான 20 ஆவது சி.ஆா்.ஐ. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.

வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 ஆடவா், 8 மகளிா் அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டியின் மூன்றாவது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவா் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 99 - 82 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டத்தில் இந்திய விமானப்படை அணி 82 - 49 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணியை வீழ்த்தியது. மூன்றாவது ஆட்டத்தில் பேங்க் ஆஃப் பரோடா அணி 85 - 73 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது.

ADVERTISEMENT

நான்காவது ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 77 - 51 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது. மகளிா் பிரிவு முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி 80 - 65 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்போா்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் கேரள போலீஸ் அணி 72 - 57 என்ற புள்ளிகள் கணக்கில் தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT