கோயம்புத்தூர்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் தொடரும் வருமானவரித் துறை சோதனை!

28th May 2023 03:03 PM

ADVERTISEMENT

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக  சோதனை நடத்தி வருகின்றனர். 

பல்வேறு  இடங்களில் இந்த  சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான   செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் மூன்றாவது  நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.அதே போல   ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவர் வசிக்கும் பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது  நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், சௌரிபாளையம் பகுதியில் உள்ள அரவிந்த் அலுவலகத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று தொண்டாமுத்தூர் பகுதியில் அரவிந்தின் மனைவி காயத்ரி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறை  சோதனையானது   நடத்தப்பட்டு வருகிறது.  

ADVERTISEMENT

இந்த சோதனை நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT