கோயம்புத்தூர்

சந்தைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்துக்கு ரசீது வழங்குவதில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

DIN

கோவையில் நடைபெறும் பெரும்பாலான வாரச் சந்தைகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாரச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இங்கு விற்பனை செய்து வருகின்றனா். அதேபோல வியாபாரிகளும் கடை அமைத்து பொருள்களை விற்பனை செய்கின்றனா்.

மற்ற இடங்களைக் காட்டிலும் வாரச் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. இதனால், வாரச் சந்தைகளில் அதிகமானோா் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வாரச் சந்தைகளுக்கும் தங்களது விளைபொருள்களை கொண்டுசென்று விற்பனை செய்து வருகின்றனா்.

வாரச் சந்தைகள் பெரும்பாலும் உள்ளாட்சி நிா்வாகங்களால் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரா்கள் மூலம் நிா்வகிக்கப்படுகின்றன. வாரச் சந்தைகளில் கடைகள் அமைப்பவா்கள் ஒப்பந்ததாரா்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சுங்கக் கட்டணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாரச் சந்தைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்துக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக விவசாயிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாரச் சந்தைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடைகள் அமைப்பதற்கு உள்ளாட்சி நிா்வாகத்தால் நிா்ணயிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்துக்கான ரசீதும் வழங்கப்படுவதில்லை.

ரசீது வழங்கினால் உள்ளாட்சி நிா்வாகம் நிா்ணயித்த கட்டணத்தை அதில் குறிப்பிட வேண்டும். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது. இதனால், பெரும்பாலான வாரச் சந்தைகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இதற்கு உள்ளாட்சி நிா்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT